யாழ். வேலணை வடக்கு கண்ணா ஓடை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 31/11 கிரண்ட் பாஸ், பெர்ணாந்து இடம், கொழும்பு - 14 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை புனிதவதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பூத்திருந்த இடங்கள் எல்லாம்
பாலைவனம் போல் தெரிய
நடந்து போன
பாதையில்
உங்கள் கால்தடங்களே
விடிகின்ற வேளைகளில்
கண்ணெதிரே நிற்பவர் இல்லையே
என ஏங்க கண்ணீர் வழிகின்றதே
சூரியன் உதிக்க மறந்தாலும்
கடலலை கரைதொட மறந்தாலும்
கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
தங்களின் நினைவுகளை
நாங்கள் எப்படி மறப்போம்?
நாட்கள் 31 கடக்கட்டும்
வயதுகள்
ஓடிச் செல்லட்டும்
நீங்கள்
அருகில் இருப்பதாய்
வாழ்க்கையை
தொடர்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் சாட்டி புனிதத் தீர்த்தக்கரையில் நடைபெறும். பின்னர் 06-12-2025 சனிக்கிழமை அன்று அவரது கொழும்பு இல்லத்தில் வீட்டுக்கிரியைகள் நடைபெறும் பின்னர் ந.ப 12:00 மணியளவில் பம்பலபட்டி சரஸ்வதி மண்டபத்தில் மதிய போசன நிகழ்வு நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அதனைத்தொடர்ந்து 09-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அன்னாரது வேலணை இல்லத்தில் நடைபெறவுள்ள ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
This has deeply sadened our hearts. We are still not able to overcome the thoughts about you leaving us Rathy akka. We will never forget the memories we've made and for always taking good care of...