யாழ். வேலணை வடக்கு கண்ணா ஓடை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 31/11 கிரண்ட் பாஸ், பெர்ணாந்து இடம், கொழும்பு - 14 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை புனிதவதி அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலம்சென்ற அமிர்தலிங்கம் நித்தியலெட்சுமி தம்பதிகளின் புதல்வியும்,
காலம்சென்ற நாகநாதபிள்ளை இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன்(லண்டன்), பிரதீபா(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
கிஷாந்தன்(கனடா), அஞ்சனா(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
தர்மாவதி(கனடா), காலம்சென்ற சிவகலை(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அவினாஷ்(கனடா), ஆதித்(கனடா), றியான்(கனடா), டிஷான்(கனடா) ஆகியோரின் பாட்டியும்,
இராசம்மா, கமலாம்பிகை(கனடா) ஆகியோரின் பெறாமகளும்,
நாகராசாவின் மருமகளும்,
தனபாலசிங்கம், கஜேந்திரன், சியாணி குமார் ஆகியோரின் சித்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-11-2025 வியாழக்கிழமை முதல் 08-11-2025 சனிக்கிழமை வரை அவரது கொழும்பு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது சொந்த ஊராகிய வேலணைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 11:00 மணிமுதல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94774706460
- Mobile : +94761436826
- Phone : +94779371846