யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nogent-l'Artaud ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசாத்தி பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உயிர் தந்த எம் அன்னையே!
31 நாட்கள் போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே!
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்!
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே!
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our deepest sympathies to her family. May her soul rest in peace.