யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை ஓவசியர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் சின்னத்தங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-09-2024
விழிகள் இரண்டும் சொரிந்தநீர்
இன்னும் வற்றவில்லை தாயே அம்மா
கண்ணீரின் உப்பு கரிப்பு மாறவில்லை
ஆனால் இரண்டாகி விட்டது தாயே அம்மா
எட்டுத் திசைகளிலும் தேடுகின்றோம்
எமை ஆறுதல்படுத்த யாருமில்லை தாயே அம்மா
துன்பங்கள் துயரங்களில் சோர்ந்து வந்து
தலைசாய உன் மடியில்லையே தாயே அம்மா
புல்லாங்குழலாய் நீங்களிருந்து வெற்றுக்காற்றாய்
புகுந்த எங்களை இசையாக்கினீர்களே தாயே அம்மா
உடைந்த சங்காயிருந்த எங்களில் காற்றாய்
புகுந்து ஒலியா வர வைத்த தாயே அம்மா
மண்ணாக நீங்கள் விதையாக புதைந்து எங்களை
மரமாக்கி தோப்பாக்கினீர்களே தாயே அம்மா
பிறந்ததிலிருந்து உடன்பிறப்புகளுடனும் உறவுகளுடனும்
பாசாங்கில்லா பாசம் கொண்ட தாயே அம்மா
திரும்பும் திசையெல்லாம் உன்முகம் பேசும் ஒவ்வொரு
வார்த்தையிலும் உங்கள் குரல் கேட்கிறதே தாயே அம்மா
எங்களை வளம் பெற வளர்தவளே, காத்தவளே
ஒரு வாய் முணுத்தம் கேட்டதில்லை தாயே அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கண்டிப்புடன்
அன்பு கொண்டவளே அன்னையே நாங்கள்
எப்போ காண்போம் இனி???