

யாழ். காங்கேசன்துறை மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டு அம்பாள் வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் செல்வராணி அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நிற்சிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசகாந்தன்(பிரான்ஸ்), செல்வகுமாரி(ஜேர்மனி), இராசகுமார்(பிரான்ஸ்), செல்வநாயகி(ஐக்கிய அமெரிக்கா), விஜயகுமாரி(சமூக சேவை உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், சாவகச்சேரி), இராசரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜிதா(பிரான்ஸ்), சிவநாதன்(ஜேர்மனி), கவிதா(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(ஐக்கிய அமெரிக்கா), முகுந்தன்(விரிவுரையாளர்- ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம், வேலணை), அனித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சுப்பிரமணியம், புஸ்பராணி மற்றும் தெய்வராணி, புஸ்பதேவன்(இளைப்பாறிய தபால் தரம் பிரிக்கும் உத்தியோகத்தர்- MSO), சின்னத்தங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவசம்பு, ஜெயலட்சுமி, அருந்தவநாதன், சின்னத்தம்பி மற்றும் சிவனேஸ்வரி, செல்லத்துரை, வேலுப்பிள்ளை, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜீவன், வினோஜன், வைஷ்ணவி, விபூசன், விதுர்சன், அனுசா, ருக்ஷினி, லக்ஷினி, ஆகாஷ், லோஜன், டிலக்ஷன், காயத்திரி, திவ்யன், பிரவினா, கர்ணி, ஜனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01.30 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல. 83, அம்பாள் வீதி,
நாயன்மார்கட்டு,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details