யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் பரிமளகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக் கணவனுக்காய்....
ஆற்றிடாத்துயரத்தில் அலைபாயும்
என்மனதை ஆற்றிட இனியாருமில்லை
உனக்காக நானிருப்பேன்
உன்னுடனே நான் வருவேன்
என எனக்காக வாழ்ந்தவரே
என்கனவை எந்நாளும்
உன்நெஞ்சில் சுமந்தவரே அதனால் தான்
உன் வாழ்வை நினைப்பதற்கு
உனக்கென்று ஒரு காலத்தை
உருவாக்க மறந்திட்டாய்...
காலம் ஓடுவதை காண மறந்ததினால்
காலன் உனை எளிதாக காவு
கொண்டான் சீக்கிரமாய்...
காலங்கள் பறந்தோடி வாழ்வின்
மறுபாதி கானல்நீராக
மாறுமென்று
கனவில்கூட நினைக்கவில்லை
கண்ணிமைக்கும்
நேரத்தில் காற்றாகப்பறந்ததையா ஒருவருடம் நீ மறைந்து...
எங்கு நீ
சென்றாலும் எத்தனைவருடம் மறைந்தாலும்
என்னுடல் மறையும்வரை உனைமறக்க
நான்மறவேன்
என்னுயிரே....
எங்கள் அன்பு அப்பா !
எங்கள் ஆசை அப்பா !
எங்கள் செல்ல அப்பா !
எங்கள் உயிர் அப்பா !
வாழும் காலமெல்லாம்
எமக்காக வாழ்ந்திங்களே.
அல்லி அமுதூற்றி - அன்பால்
எமை தாங்கினீங்களே.
எமைப் பிரிந்து ஒரு வருடம்
எப்படிப் பறந்ததென்று எங்களால்
நினைத்துப்பார்க்க
முடியவில்லை.
உங்கள் பிரிவை எப்படி - தங்குவோம்
என்று பலமுறை நினைத்தோம்.
அனால் நீங்கள் இன்னும் - எங்களுடன்
இருப்பது என்று எங்கள் மனம் சொல்லுகிறது.
அதை எங்கள் பலமாய் நினைத்து,
இன்று நாங்கள் உங்கள் அடிச்சுவடுகளை- பின்பற்றி
வருகிறோம் அப்பா!
இன்று நாங்கள் உங்கள் - பேரனுக்கு
உங்களை பற்றி பல கதைகள் கூறுவோம்.
உங்கள்
புன்னகை சிரிப்பு
உங்கள் பேரன் மூலம் காண்கிறோம்.
நீங்கள் எங்கள் அப்பா என்று
நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Rest in Peace. Our deepest condolences to the family. Nagaratnam family