யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, அளவெட்டி, மாதகல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் வேலாயுதம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது எல்லாம் உம் நினைவாக
துடிக்கும் உம் உறவுகளின் புலம்பல் இது!
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையே!
ஒரு மாதம் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு தந்தையாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
முகவரி:
காஞ்சிபுரம்,
மாதகல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அந்தியேட்டிக் கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் மாதகல் சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் அந்தியேட்டி மடத்திலும். வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.