Clicky

நினைவஞ்சலி
மலர்வு 05 MAY 1928
உதிர்வு 14 DEC 2018
அமரர் இராசம்மா ​நாகலிங்கம் 1928 - 2018 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Évry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா நாகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!

கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவனே!

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

நன்றி நவில்கின்றோம்

எங்கள் அன்புத் தாயார் திருமதி நாகலிங்கம் இராசம்மா எம்மை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு உடன் வந்து எங்களுடன் தங்கள் தூயரங்களைபகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், அயலவர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி மற்றும் மின் அஞ்சல், முகநூல், சமூகவலைத் தளங்களில் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், நேரில் வந்து இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்து மலர்தூவி, மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும் பல வழிகளில் உதவி புரிந்த அன்புள்ளம் கொண்டவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 19-01-2019 சனிக்கிழமை அன்று Eglise Saint Pierre Saint Paul, 44 Rue Charles Hermite, 75018 Paris, FranceMetro Ligne 12, Porte Dela Chapelle, Tramway Direction Porte De Vincennes 1வது தரிப்பிடம் "Colette Besson" எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெறும் அதனைத் தொடர்ந்து மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்