3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசம்மா மகாலிங்கம்
வயது 82
Tribute
19
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கிளிநொச்சி பளையை பிறப்பிடமாகவும், இல.24, பாலிநகர், வவுனிக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், ஜேர்மனி Meschede ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா மகாலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்திற்கும் பண்பிற்கும் அரவணைப்பிற்கும்
பாரில் இலக்கணமாய் விளங்கிய
எங்கள் அன்னையே! உங்கள் முகம் கண்டு
ஆண்டு மூன்று ஆனதோ அம்மா...!
நேசத்துக்கு என எங்களைப் பெற்றெடுத்து
ஆளாக்கி பேணிக்காத்து பெருவாழ்வு
எமக்களித்த எம் தாயே..!
நின் திருமுகம் கண்டு ஆண்டு மூன்று ஆனதோ !
மரணம் உங்களை எங்களிடம் இருந்து பிரித்து விட்டாலும்
எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை பறித்திட முடியாதே!
நிலையில்லா இவ்வுலகை விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.....!
தகவல்:
குடும்பத்தினர்
Alntha Anuthapankal