Clicky

அன்னை மடியில் 16 OCT 1944
இறைவன் அடியில் 27 JUL 2021
அமரர் இராசம்மா பொன்னுத்துரை
வயது 76
அமரர் இராசம்மா பொன்னுத்துரை 1944 - 2021 கோவில் போரதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasamma Ponnuthurai
1944 - 2021

கண்ணீர் அஞ்சலி ! ------------------------------ தாயெமை விட்டுச் சென்ற தவிப்புகள் போக்கும் வண்ணம் சேயெமை வளர்த்தீர் அந்தத் திருவுளம் மறைந்து போச்சே காயமே பொய்தான் என்னும் கருத்தியல் அறிந்த போதும் மாயமாய் போன உம்மை மறந்திட வழிதான் என்னே ! தோற்றமும் மறைவும் என்று துயர்தனைப் பகிர்ந்த போதும் போற்றுமும் செயல்கள் யாவும் பொறைநிறைந் திருக்கு திங்கே! ஏற்றிடும் விளக்கில் உங்கள் இன்முகம் தெரியக் கண்டும் ஆற்றொணாத் துயர்தான் எந்தன் ஆன்மாவை அறுக்கு திங்கே ! அன்னையை இழந்து பட்ட ஆழ்வலி போக்கி நாளும் இன்முகத் தாலே என்றன் இடர்தனைக் களைந்து வாழ்வில் நன்னறும் சோலை யாக நாளெலாம் வாசம் தந்து இன்றெமைப் பிரிந்தீர் எனோ ? இதுவிதி அம்மம் மாவே ! சுற்றமும் சூழ்ந்தி ருக்கச் சோதியாய் மறைந்த உங்கள் பெற்றநல் பேரன் நானும் பேணிடப் பக்கம் இன்றி பற்றிலாப் பிள்ளை என்னும் பழிதனை சுமந்த தைப்போல் அற்றவர் கையாய் நாளும் அழுகிறேன் அயல்நா டொன்றில்! தேனினும் இனிய வார்த்தை தினந்தினம் பேசிப் பேசி ஊனுயிர் உள்ளம் எல்லாம் உறைந்தெமைத் தவிக்க விட்டு வானகம் சென்றீர் அந்த வாமனன் அடியைப் பற்றி போனவும் உயிரும் என்றும் புகழுற வேண்டு கின்றேன் !

Tribute by
Nakkeeran
Peran
United Kingdom
Write Tribute