Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 DEC 1934
இறப்பு 14 JAN 2023
திருமதி இராசலிங்கம் விசாலாட்சி 1934 - 2023 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், காலி, தெல்லிப்பழை, சங்கானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசலிங்கம் விசாலாட்சி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 03-01-2023

ஆண்டொன்று ஆகியும் ஆறவில்லை எம் துயரம்
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன

நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரே

எங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல்  உணர்கின்றோம்

அன்பிற்கு இலக்கணமாக இருந்த எங்கள் அம்மாவே
ஆயிரம் உறவுகள் அணைத்திட இருந்தாலும்
உம்மை போன்று அன்பு  காட்ட யாரும் இல்லையம்மா...

அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...

உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்

என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.

தகவல்: சிறிபாஸ்கரன்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 14 Jan, 2023