யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sinsheim ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சிறிநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக் சாருண்டிக்கரணக் கிரியைகள் காலை 10:30 மணியளவில் அன்னாரது இல்லத்திலும்(வோல்ஸ் லேன், கொழும்பு - 15.) நடைபெறும். பின்னர் பகல் 12:00 மணியளவில் மோதரை நாவலர் மணிமண்டபத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொள்வதோடு தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
kannan vava family