1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sinsheim ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசலிங்கம் சிறிநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
அம்மாவிற்கு மகன் இல்லை
மாமிக்கு மருமகன் இல்லை
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைகளுக்கு தந்தை இல்லை
சூரியனே! நீ இன்றி எங்களுக்கு
ஒளியே இல்லை...
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
பிரிவால் வாடும் அம்மா, மாமி, மனைவி, பிள்ளைகள்...
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
kannan vava family