Clicky

பிறப்பு 02 MAY 1938
இறப்பு 15 DEC 2022
அமரர் இராசலிங்கம் இராசலட்சுமி
வயது 84
அமரர் இராசலிங்கம் இராசலட்சுமி 1938 - 2022 உடுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மச்சாள் 18 DEC 2022 United Kingdom

நான் மச்சாள் என்று அன்பாக அழைக்கும் எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய காலஞ்சென்ற எனது அண்ணனின் மனைவி அன்பு மச்சாள் இன்று எங்களைப் பிரிந்து இந்த மண்ணுலக வாழ்வை விட்டு விண்ணுலகத்திற தனது கணவனை காண சென்று விட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் எனது அண்ணன் வானுலகம் சென்ற செய்தியை கேட்டு துடித்து நான் தாயகம் சென்ற போது எனது மச்சாளை பார்த்தேன். அவாவின் வேதனை கலந்த முகம் " நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன்" அன்று என்னை கட்டி அணைத்து அழுதது இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. அவர் எனது அண்ணாவின் மீது மாறாத அன்பு கொண்டிருந்தார். அண்ணாவின் மறைவு அவரை வாட்டி வதைத்தது. எல்லையற்ற வேதனையில் இருந்தார். என்ன செய்வது இது காலத்தின் நியதி. காலையில் மலரும் பூக்கள் மாலையில் வாடுவது போலும், இந்தப் பூமிக்கு யாத்திரை வந்தவர்கள் எல்லோரும் யாத்திரை முடிந்ததும் மீளா நித்திரை கொள்வது போல் எனது மச்சாளும் மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டார். மச்சாளின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.