1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாய் புதுமடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசலிங்கம் மகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-06-2022
காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள் ! கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்ரோம்.