யாழ். மயிலியதனை தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பட்டுப்பூச்சி சந்தி, திருவள்ளுவர்நகர், யோகபுரம் கிழக்கு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலச்சுமி குணரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
அம்மா 31 நாட்கள் கரைந்ததம்மா
உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு
என்றும் பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின் அர்த்தம் புரிந்த
அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!
கள்ளம் கபடமற்ற உள்ளத்தில் உதித்த எம்மை
கண்கண்ட தெய்வமாய் காத்தவள் நீ அம்மா!
உங்கள் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 09-05-2026 சனிக்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் இடம்பெற்று வீட்டுக்கிருத்தியம் 11-05-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பதினருடன் வருகைதந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். முகவரி
முகவரி:
இல.08, பட்டுப்பூச்சி சந்தி
திருவள்ளுவர் நகர்,
யோகபுரம் கிழக்கு
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தவர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.