Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 APR 1937
இறப்பு 27 AUG 2021
அமரர் இராசையா நடராஜா 1937 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கட்டுநாயக்காவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 15-09-2022

என் அன்புக்குரிய அப்பாவே......!!!!!

நீங்கள் சென்ற இடம் தான் எங்கோ?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
ஓராண்டு ஆனாலும் ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!

என்னை அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
வழி நடத்திய அந்த நாட்கள் என் நினைவலைகளில்
என்றும் சுழில்கிறதே அப்பா.... 

தந்தை என்ற சொல்லுக்கே அடையாளமாக
அன்புடன் கூடிய கண்டிப்புடன் என்னை மற்றவர்கள்
போற்றும்படி வளர்த்தீர்கள்!!

நான் தான் உலகம் என்று வாழ்ந்தீர்கள் அப்பா!
மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்
அனைவரையும் அன்பு கலந்த மரியாதையுடன்
அரவணைத்தீர்களே அப்பா!!

காலங்கள் பல கடந்து போனாலும்
என் மீது வைத்த ஆழமான அன்பின் பதிவுகள் என்றும்
என் மனதில் பதிந்திருக்கும்

கண்ணை இமை காத்தது போல எனைக்
காத்த அன்புத் தெய்வங்களான அம்மாவே...!! அப்பாவே!!
காத்தது போதும் என்று என்னைவிட்டுச் சென்றீர்களோ..!!

உங்களுடன் வாழ்ந்த குடும்ப வட்டத்தில்
இன்று நான் தனிமரமாக நிற்கின்றேன்...!!
அப்பா....!! அம்மா....! நீங்கள் இருவரும் நல்ல நிலையை
அடைய ஆண்டவன் அருள் புரியட்டும்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices