யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கட்டுநாயக்காவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா நடராஜா அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும்.
41 நாள் சென்றாலும் எம் மனதை ஆற்றமுடியவில்லை
உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய இயலாமல் தவிக்கின்றோம்.
அன்று எங்கள் துன்பம் யாவும் நீங்க
பாசத்தின் பிறப்பிடமாய்,
பண்பின் உறைவிடமாய்,
வாழ்வின் வழிகாட்டியாய்
எம்முடனே எமக்காகவே
வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே!
பண்பின் சிகரமே!
உனது அன்பாலும்,
அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும்,
அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும்
அனைவரையும் கவர்ந்தவரே!
உற்றார், உறவினர்களிற்கு நற்பண்பை காட்டியதுடன்
உங்களை நம்பி நடப்பவர்களிற்கெல்லாம் எதையும்
செய்யத் துணிந்த கருணைக் கடலே!
உயிருக்கும் மேலானவரே!
உம் நினைவோடு நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராராய்
மடை திறந்து பெருகுதய்யா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
We are deeply saddened to know about Nadarajah uncle passing away. He was one our father late Yoganathan’s best friend. We knew him from our childhood. He was a kind hearted person who was very...