யாழ். தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Stains ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா ஈஸ்வரமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!
காலங்கள் உருண்டோடி
ஓராண்டைக் கடந்தாலும்
நெஞ்சம் மறக்குதில்லையே- உங்கள்
நினைவுகள் வாட்டுவதால்
உள்ளம் உறங்குவதில்லையே
உங்கள் ஒளிமுகம் தோன்றுவதால்!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
எம் அருகில் நீங்கள்
இன்று இல்லையே- அப்பா
உங்கள் நினைவுகளை நெஞ்சம் மறக்குதில்லையே!
எம் குடும்பத்திற்கு நல்ல தலைவனாய்
எம் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாய்,
உற்றார், உறவினர், நண்பர்களுக்கு
நல்ல வழிகாட்டியாய்
எமக்கெல்லாம் கலங்கரை
விளக்காய் இருந்தீர்களே- அப்பா
இன்று காலனதை அணைத்ததேனோ!
எம் இதய தெய்வத்தின் ஆத்ம சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Bonjour moi et la famille condoléances