Clicky

பிறப்பு 26 JAN 1931
இறப்பு 02 APR 2026
திருமதி இராசையா ருக்குமணி
வயது 95
திருமதி இராசையா ருக்குமணி 1931 - 2026 கரம்பொன் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகுந்தன் - அருந்தா (பிரான்சு) 03 APR 2026 France

ஆழ்ந்த இரங்கல்! கரம்பன் கிராமத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற தம்பதெனியா வர்த்தகர் இராசையா அவர்களது துணைவி ருக்குமணி அவர்கள் காலமாகிய துயர் தகவல் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக எட்டுகிறது. உலகெங்கும் சிதறியோராய் வாழ்வைத் தொடரும் எமக்கு இத்தகைய பிரிவுச் செய்திகள் கிளறும் நினைவு அதிர்வலைகள் மனத்திரையில் சில அசையும் காட்சிகளை பிரதியிடுகின்றன. கரம்பன் வாழ்வில் நெருங்கிப் பழகிய நட்புக் குடும்பங்களாக நம் குடும்பங்கள் இருந்தன. எங்கள் ஆரம்பப் பள்ளியாக கரம்பன் சண்முகநாத மகா வித்தியாலயம் அமைந்திருந்தது. இவர்களது மூத்த மகன் மகிந்தனுடன் நான் ஒருமுறை தம்பதெனியா கடைக்குப் போயிருக்கிறேன். அருகில் வழுவிச் செல்லும் மகாவலி ஆற்றில் குளித்தும் இருக்கிறேன். மலைகளோ ஆறுகளோ இல்லாத தீவகக் கிராமங்களில் பிறந்து வளந்த எமக்கு இத்தகைய அனுபவங்கள் நீங்கா நினைவுகளாகியுள்ளன. கனடாவில் தற்போது வசிக்கும் மகிந்தனுடன் ஓரிரு தடவைகள் தொலைபேசியில் உரையாடி உள்ளேன். கரம்பன் இணையத் தளம் பற்றியும் கிராம அபிவிருத்தி பற்றியதாகவும் அவ்வுரையாடல் அமைந்திருந்தது. இவர்களது வீட்டுக்குச் செல்லும்போது இன்முகத்தோடு எமை வரவேற்று விருந்தோம்பி மகிழும் ருக்குமணி அம்மா நம் மனதில் நிறைந்து இருக்கிறார். காலங்கள் கரைகின்றன.. ஒரே ஊரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இலங்கையில் நிகழ்ந்தேறிய இனவாத வன்கொடுமைகளால் தூக்கி வீசப்பட்டவர்களாய் புவியெங்கும் விரவி வெவ்வேறு தடப் பயணமாகிப் போனது நம்மவர் வாழ்வு. எமது சந்ததியினரும் பூர்வீக ஊரோ - சுற்றமோ அறியாதோராய் கண்டங்கள் கடந்தோராய் தமக்கான திசைப் பயணத்தைத் தொடங்கியும் விட்டனர். மண்ணின் மைந்தர்களென தமது பெயருடன் ஊரைச் சுட்டும் மரபார்ந்த வழக்கம் நீர்த்துப் போகிறது. பெருமூச்சுகள்தான் வடிகாலாகின்றன. பிறப்பு-இறப்பு நிலையாமை நியதியை ஏற்றவராய் ஆழ்ந்த இரங்கல்! உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (குறள் 339 - நிலையாமை) இவரின் இறப்பால் துயருறும் குடும்பத்தார் உறவினர் சுற்றத்தினர் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவிக்கிறோம். ருக்குமணி அம்மாவுக்கு மௌன வணக்கம்! - முகுந்தன் குடும்பம் (பிரான்சு) - கரம்பன் சங்கரப்பிள்ளை அப்பு அவர்களது மகள்வழிப் பேரன் கரம்பன் மேற்கு கந்தையா – தனலட்சுமி (கந்தையா மாஸ்டர்)பரம்பரை சார்பாக

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 03 Apr, 2026