Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 OCT 1938
இறப்பு 09 JUN 2024
திருமதி இராசா நேசமலர்
வயது 85
திருமதி இராசா நேசமலர் 1938 - 2024 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி தம்பாலை சபாலேனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசா நேசமலர் அவர்கள் 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீனியர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சக்திவேல்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

சுகிர்தா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

தாருஷன்(பிரான்ஸ்), இந்துஷா(பிரான்ஸ்), இனிஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா(மலேசியா), செல்லம்மா(இலங்கை) மற்றும் பவளம்(பிரான்ஸ்), மங்களம்(இலங்கை), காலஞ்சென்ற குணரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(மலேசியா), நாகமணி, சின்னையா, ஆறுமுகம்(தம்பாலை), அருந்தவம் மற்றும் சோமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நடராசா அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.

அன்னாரது பூதவுடல் 15-06-2024 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தம்பாலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சக்திவேல் - மகன்
சுகிர்தா - மருமகள்
சிவராஜா - மருமகன்
சிவராஜா(Whatsapp or Viber) - மருமகன்

Photos

Notices