யாழ். பெரியமணல் வலந்தலை காரைநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ராமுப்பிள்ளை சகாதேவன், பூமணி சகாதேவன் ஆகியோரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 22-12-2025
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எங்கள் அன்புத் தெய்வங்கள்
நீங்கள்...!
ஓர் ஆண்டு கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும்
உங்கள் நினைவுகள் கல்மேல் பொறித்த
எழுத்துக்கள் போல் எங்களை விட்டு அகலவில்லை.
உழைப்பை உயர்வாய் மதித்தவர் நீங்களே
உறவுகளை அன்போடு அணைத்தவர் நீங்களே
உங்களின் வழித்தடத்தை பின்பற்றி
நன்மக்களாய் நாம் மிளிர்வோம்
இதுவே உங்களுக்கு நாம் தரும் உறுதி
அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய், அம்மாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் !
எங்கள் அன்பு தெய்வங்களே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..