1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமேஸ்வரன் வேலுப்பிள்ளை
இளைப்பாறிய தபால் அதிபர் (Retired Postmaster Postal Department - SriLanka)
வயது 90
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமேஸ்வரன் வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-11-2023
அப்பா! அன்புக்கு உருவம் நீங்களப்பா!
எங்களை விட்டு நீங்கள்
எங்கு தான் சென்றீர்களோ?
ஆண்டு ஒன்று ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம் பாராமல்
நாங்கள் கலங்கித் தவிக்கின்றோம்!
ஆலவிருட்சம் போல் கிளைகளைப் பரப்பி
எங்களை எல்லாம் தாங்கி நின்றவரே!
இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள் உள்ளத்தில்
வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பெருகும்!
உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace Uncle! You are not in this world now but, you are always in our heart.