1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமநாதர் பற்பநாதன்
ஓய்வுபெற்ற முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர், கண்டாவளை
வயது 78

அமரர் இராமநாதர் பற்பநாதன்
1945 -
2024
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:27/01/2025
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடு மேற்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமநாதர் பற்பநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே
ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம்
நீங்கள் தானே உங்களுக்கு
நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும்
எம் மனம் உறங்கவில்லை
எங்களுக்குள் நீங்கள் வாழ்வதால்
நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்!!
ஒருமுறையேனும் உங்கள் முகம்
பார்த்து விடமாட்டோமா அப்பா
ஓடி வந்துவிட மாட்டீர்களா?
அப்பா எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
Deepest Condolences