Clicky

தோற்றம் 14 MAY 1968
மறைவு 17 FEB 2026
திரு ராமநாதன் உதயகுமார் (உதயன்)
வயது 57
திரு ராமநாதன் உதயகுமார் 1968 - 2026 கரம்பொன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Good buy Uthaya
Mr Ramanathan Uthayakumar
கரம்பொன், Sri Lanka

கண்ணீர் அஞ்சலி உறவுக்கு உயர்வாக வந்தாய் ஐயா உன் உள்ளமெலாம் தந்தென்றும் வாழ்ந்தாய் ஐயா! கள்ளமிலா மனங்கொண்டு உயர்ந்தாய் ஐயா! வெள்ளை உள்ளத்தால் அடிமை கொண்டாய் ஐயா! இன்பம் பெருக்கெடுக்க ஜெயந்தியைக் கரம்பற்றி இன்புறவால் சாரினியைப் புதல்வியாக் கண்டு கனிவுற்று அன்புறவாய் பாசழைபொழிந்து அவரதன்னை என்றும் அன்னப் பறவையென பாங்குறவே வளர்தீர் ஐயா! கோலச்சிரிப் பொலியில் குதூகலித்து இன்புற்றாய் கோலாகலமே வாழ்வென்று மகிழ்ச்சியிலே திளைத்தாய் ஞாலத்து உறவெல்லாம் மதிமயங்கச்; செய்துவைத்தாய் ஆலவட்டக் குடையாய் நின்றாய் சென்றதேனோ? அன்பின் அடக்கமென அன்பு மகள் சாரணியின்று இன்பின் இரத்தமென இருந்தவுனை இழந்துதவித்து துன்புற்று ஓலக்குரல் எழுப்பச்; ஒருவார்த்தை சொல்லாது மன்பதை வாழ்விதென உணர்த்திச் சென்றதேனோ? பேருறவாய் தோழனாய் உற்றதொரு நண்பனாய் வாய்ந்தநீ ஓருறவாய் சகோதரனாய் மஞ்சுஇ வனிதாஇ சாந்தி நினைந்து ஆருமற்றுச் சென்றனையோவென நடாஇ நந்தினிஇ சுபாஇ பேரூற்றாய்க் கண்ணீர் சொரியவைத்து ஏகியதேனோ? நன்நெறி ஓட்டுநர் பயிற்;சிப் பாடசாலை போதனாசிரியனாய் நன்றென பலநூறு ஓட்டுநர் சித்திபெற வைத்து அவர்தேற இன்னல் தவிர்த்து இரவுபகல் உழைத்தவரே நாம்ஏங்க தன்னலமற்று விதிவழி சென்றனை அமைதி கொள்வாய்! உந்தன் ஆத்மா நிரந்தர அமைதியைத் தழுவட்டும் பேரின்பப் பெருவாழ்வு கிட்டட்டும் ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! பிரிவால் துயருறும் அன்பின் துணைவியார்இ புதல்;விஇ சகோதரஇ சகோதரிகள்; மற்றும் குடும்ப உறவினர் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம்;. T.Sivapalu family and Neighbourhood Garden community Members 22.02.2026

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 19 Feb, 2026