
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramanathan Rokkani
1979 -
2019

ஈதென்ன கொடுமை என்று எண்ணிக்கொள்ள தோணுதடி. ஏது வாழ்க்கை எமக்கு அன்புத்தோழி நீ இன்றி... எல்லோருக்கும் உதவிகள் செய்வாயே, உண்மையாய் இருப்பாயே, எங்கே நீ சென்று விட்டாய் அம்மாடி. அன்பு என்றால் என்னவென்று உன்னிடத்தில் கற்றுக் கொண்டோம். பண்பு என்றால் என்னவென்று உனைப்பார்த்து தெரிந்து கொண்டோம். நேர்மையின் முழுவடிவமாய் நேற்று வரை இருந்தாயே. வாய்மை ஒன்றே பேசும் உன்வார்த்தை இனி எங்கே நாம் கேட்போம். கலகலவென சிரிக்கும் பாசத்தின் எழில் முகத்தை இனி எங்கே நாம் காண்போம். எட்டாததூரம் எமை விட்டுச்சென்றாலும் எமக்குள்ளே உம்நினைவு எஞ்ஞான்றும் வாழுமடி. அன்புத்தோழியே, ஆருயிரே உன் ஆத்மா சாந்தி கொள்ள ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.
Write Tribute