2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமலிங்கம் சிவகுரு
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 90
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 04-05-2025
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கண்டி- தங்கொல்லையை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய ஆசிரியர் இராமலிங்கம் சிவகுரு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் பெரியமாமா,
இரண்டு வருடங்கள்
உருண்டோடிப் போயிற்று!!
சுட்டெரிக்கும் சூரியனும்
தேய்ந்து வளரும்
குளிர் நிலவும்
என்றென்றும் வழமை போல் !!!!!
ஆனால் வீசுகின்ற
காற்று மட்டும்
காதோரம் கூறிச் சென்றது!
அதில் உங்கள்
சுவாசக்காற்று இல்லையென்று!!!!
வாழ்க்கை நெடுங்கணக்கு
கூட்டல், பெருக்கல்,
கழித்தல், பிரித்தல்
புரிந்தும் புரியாமலும்
நித்தம் நித்தம்
நினைவுச் சுழலில் நான்
மூழ்கி மூழ்கி எழுகின்றேன்!!!
கரையேறும் காலம்
எப்போதோ தெரியவில்லை
ஆனால் ஒன்று புரிந்தது
இதிகாசத்தில் மட்டுமல்ல
நந்தகோபன்!
இல்லை நிஜவாழ்விலும் உண்டு!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
திருமதி தவவதனி பவகரன்
தகவல்:
குடும்பத்தினர்
மாதா பிதா குரு தெய்வம் எனும் வழியில் உங்கள் மாமா ஊருக்கு மட்டுமே ஆசானாக இல்லாமல் உங்களுக்கும் ஆசான் மாதா பிதாவாகி தெய்வமாகியுள்ளார். அன்னாருக்கு எனது அஞ்சலிகள் ?....