Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 15 FEB 1937
மறைவு 15 JAN 2022
அமரர் இராமலிங்கம் சண்முகநாதன்
வயது 84
அமரர் இராமலிங்கம் சண்முகநாதன் 1937 - 2022 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 04/01/2023

நினைவுகளைச் சுமந்து நீந்திக்
கரை சேரத் துடிக்கிறோம்
 கனவுகளை கண்டு கண்ணீரால்
 நனைந்த நாட்கள் நினைக்கிறோம்

மறக்க முடியவில்லை அப்பா...
மாசற்ற மாணிக்கமாய்
மாற்றுக் குறையாத் தங்கமாய்
எங்கள் குடும்பத்தில் கொழசவிருந்து
அரசாண்ட மன்னவரே!

உலகை விட்டுப் பிரிந்தாலும்- உங்கள்
நினைவு எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
 உறவை விட்டுப் பிரிந்தாலும்- உயிரே
 எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்..

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..

உம் பிரிவால் வாடும்
 பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்...

தகவல்: குடும்பத்தினர்