
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கந்தசாமி அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பூதப்பிள்ளை தங்கநாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமலர்ச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பொன்மணி மற்றும் தவமணி, சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் குணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தமிழ்ச்செல்வி(அதிபர்- யா/ஏழாலை ம.வி), அருள்மொழிவர்மன்(மின் இணைப்பாளர்), காலஞ்சென்ற சிவதீபன் மற்றும் பிருந்தாபன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்), கௌரீஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகாணந்தம்(கருமாரி மோட்டேர்ஸ் கொழும்பு), காந்தமலர்(தாதியர்- போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), கோபிகா(மருந்தாளர் வைத்தியசாலை- அனலைதீவு), லக்சியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகிழினி, மைவிழி(மாணவிகள் யா/ மகாஜனாக் கல்லூரி), அர்ச்சயா(யா/வேம்படி மகளிர் கல்லூரி), ஜக்சயா, நிகிலன், கவிசாலி, அதியவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, இராசரத்தினம் மற்றும் சுசிலாதேவி, காலஞ்சென்ற விஜயகாந்தன் மற்றும் விமலகாந்தன், மைதிலி, மதனகாந்தன், காலஞ்சென்ற லவக்குமார்(உத்தமன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2025 திங்கட்கிழமை அன்று ந.ப 01.00 மணியளவில் அவரது இல்லமான தமிழ் இல்லம் குறும்பன்வளவில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
குறும்பன் வளவு,
ஏழாலை மேற்கு,
ஏழாலை.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details