5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 12 JUN 1942
மறைவு 28 JAN 2017
Dr. இராமலிங்கம் கனகலிங்கம்
வயது 74
Dr. இராமலிங்கம் கனகலிங்கம் 1942 - 2017 வயாவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மேற்கு திக்கத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தியக் கலாநிதி இராமலிங்கம் கனகலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஐந்தாண்டுகள் சென்றிருந்தால் என்ன ஐய்யா
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே காற்றாடுதய்யா!

துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளி கூட துவழாமல் எம்மைதூக்கி விட்ட தந்தையே

கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி அரவணைத்து 
பேணிக் காத்த எம் தெய்வமே!

இன்னும் நீங்கள் காட்டிய பாதையிலேயே
உங்கள் நினைவுகளைச் சுமந்தபடியே
நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஐயா

ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices