1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 14 AUG 1948
மறைவு 05 JUN 2021
அமரர் ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன்
வயது 72
அமரர் ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன் 1948 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bienenbüttel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பா நீங்கள் இல்லாமல்
நாங்கள் சந்தோஷமா இல்லை
உங்களை பற்றிய நினைவுகள் எங்கள்
நெஞ்சுக்குள்ளே இருக்கு
உங்கள் சிரித்த முகமும், பேச்சும் எங்கள்
நெஞ்சை விட்டு நீங்காமல் வைரமாக
பதிந்து நிலைத்துருக்கும் அப்பா
நீங்கள் எங்கள் எல்லோரையும்
விட்டு சென்ற காட்சிகள்
எல்லாம் நெஞ்சை விட்டு
போகவில்லை அப்பா.

ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா
 என அழைப்பதற்க்கு
 நீங்கள் இல்லையே அப்பா.

ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
 நல்லவனாக பார் போற்றும் வல்லவனாக
 வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே

எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
 எம் தந்தையின் மறு உருவமே!
ஓராண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!

எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
 வழிகாட்டியே நீர் இப்பிறவி
அல்ல எப்பிறவியிலும்
எமக்கு உறவாக வேண்டும்! என
 இறைவனை மன்றாடுகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 09 Jun, 2021
நன்றி நவிலல் Sun, 04 Jul, 2021