திதி :01/06/2026
யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஓமான், ஐக்கிய அமெரிக்கா New york, Boston ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமகிருஷ்ணன் பொன்னம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா!
அன்புக்கு இலக்கணமாயும் பாசத்தின் உறைவிடமாயும்
பாரினில் எங்களை எல்லாம் பாசத்துடன் அரவணைத்து
வழிநடத்தினீர்கள் அப்பா நீங்கள் எங்களுடன்
வாழ்ந்த காலம் கனவாகி போனாலும் உங்கள் நினைவுகள்
நிழலாய் தொடருது அப்பா!
ஆண்டுகள் ஆயிரம் சென்றாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் நெஞ்சை விட்டு அகலாது அப்பா
மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் எங்களுடன்
வந்து விடுங்கள் அப்பா!
எங்களை எல்லாம் விட்டு எங்கு சென்றீர்கள் அப்பா
ஆண்டுகள் பல சென்றாலும் எங்கள் நெஞ்சினில்
என்றும் வாழ்வீர்கள் அப்பா!
ஓராண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவு தான் அப்பா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!
பாசமாய் வளர்த்து பாரினிலே போற்ற
வழி காட்டினீர்கள் எமதருமை அப்பாவே!
ஓராண்டு அல்ல பல யுகம் கடந்தாலும்
ஏதோவொன்றாய் உனது வியாபகம் அப்பா
முன்நோக்கி ஓடுகின்ற காலத்தால் முடிவதில்லை
பின்நோக்கி ஓடுகின்ற நினைவுகள் நிறுத்த அப்பா
உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Please accept our heartfelt condolences. Mrs Meenalosani Vivekananthan , Dr Kandeepan and family