
யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு ராஜ்குமார் அவர்களின் 34ம் ஆண்டு நினைவலை.
எம் எண்ணங்கள் கனவானதே….
எம் உயிரான உடன் பிறப்பே ராஜ் அண்ணா,,,,
அண்ணா உங்கள் திறமைகளோ ஏராளம் ,
அதேபோல் பாசமும் அதிகம் தான்,,
யாழ் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை முடித்து விட்டு,
வேலை தேடும் வேளையிலே….,
அரக்கர் கையில் 1990ம் ஆண்டு
எம் கண் முண்ணே பிடித்துச் செல்லப்பட்டீர்கள்.
நாம் தினமும் உங்களை தேடி அழைந்தோம் அண்ணா,
நாட்கள் ஓடி மாதங்கள் ஆயின,
நாம் காத்திருந்தோம் உங்களின் வரவுக்காக….
மாதங்கள் உருண்டோடி ஓர் வருடமும் கடந்தது அண்ணா..,
ஆனாலும் நீங்கள் வரவில்லையே அண்ணா..,
கடைசியில் எம் கனவுகள் அனத்துமே கருகாகிப் போனதே அண்ணா…
காத்திருந்த எமக்கு கடைசியில் கிடைத்தது உங்களை பிரிந்த செய்தியே…
அண்ணா எத்தனை வருடங்கள் ஓடினாலும்,
நீங்கள் எம்முடன்
வாழ்கின்றீர்கள்.
உங்கள் உறவு என்றும் எம்முடன் வாழும் அண்ணா…
உங்கள் இடத்தை நிரப்ப எவராலும், முடியாது …
உங்கள் இடம் என்றும் வெற்றிடமே…
உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
உடன் பிறப்புக்கள்,
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
உங்கள் பிரிவால் துயருட்டிருக்கும் சகோதரர்கள் ,
சகோதரி,மைத்துனர்,மைத்துனிகள் மற்றும் பெறாமக்கள்.
??❤️❤️??⚘️⚘️??அண்ணா??❤️❤️??⚘️⚘️?????????❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️???????????????⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️???????????????