

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kaufbeuren ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து கடந்தாலும் உங்கள்
நினைவுகள் உள்ளத்தை விட்டு அகலாது
நானும் மகளும், மருமகனும், உறவுகளும்
தாங்கமுடியாத வேதனையில் சொல்வதற்கு
வார்த்தையும் இல்லாமல் தவிக்கின்றோம்
மறக்க முடியாத சோகத்தை தந்து விட்டு
எங்கு சென்றீர்கள் ?
கற்றுத்தந்தவள் நீ
பற்று வைத்தவளும் நீ
இனிய சுற்றுத்தருணங்களை
எமதாக்கியவளும் நீ
இற்றுவிடா இனிய வாழ்வை எமக்களித்து
அதில் நீ அற்றுப்போனதேன் அம்மா!!
உதித்த நாளில் உதிர்ந்த எம் கோயிலே
குடியிருந்த நாம் தவிக்கின்றோம்
குதூகலிக்க நீயின்றி
நெஞ்சில் வலியுடனும்
நீங்காத நினைவுகளோடும்
என்றென்றும் உங்கள் அழியா நினைவுகளுடன் வாழும்
ஆத்மா சாந்திக்கு என்றும் இறைவனை பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்
கண்ணீருடன் நினைவு கூறுகிறோம். வசந்தி-அந்தனி! Füssen.