1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம்
முன்னாள் ஆசிரியை - விக்னேஸ்வரக் கல்லூரி- கரவெட்டி, விவேகானந்தா கல்லூரி- கொழும்பு, மெதடிஸ்த் கல்லூரி- திருகோணமலை
வயது 71
Tribute
96
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 18-01-2022
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
“அன்புள்ள அம்மா ஓடி மறைந்ததம்மா
ஆண்டு ஒன்று உன் நினைவுகள் ஓராயிரம்
ஆண்டு சென்றாலும் மறைந்திடுமா?
விழிகள் களைப்படைந்து கண்ணீரில் மிதக்கின்றன
இறையருள் கொண்ட என் தாயே இரக்கப்பட்டா
இறைவனும் உன்னை எடுத்துவிட்டான்”
அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்- நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து ஓராயிரம்
ஆண்டானாலும் உங்களை மறந்திடுமோ
எங்கள் நெஞ்சம்!
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்