யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உங்கள் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 14-04-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் 11:00 மணிவரை ஒபேர்வில்லியர்ஸில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து பி.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Restaurant Paradise, 10 Av. Louis Aragon, 93000 Bobigny, France எனும் முகவரியில் மதிய விருந்திலும் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், குறிப்பாக தாயாருக்கு துணையாக இருந்து அவர்களுக்கு உதவி செய்த தாயாரின் நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.