31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 05 FEB 1935
இறப்பு 12 JUL 2022
திருமதி இராஜேஸ்வரி சகாதேவன்
வயது 87
திருமதி இராஜேஸ்வரி சகாதேவன் 1935 - 2022 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வல்வெட்டி முடப்பனையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, மலேசியா Muar, இந்தியா சென்னை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சகாதேவன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் வீட்டு குலதெய்வமே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது!

 உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கின்றேன்..

உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், Whats app, Viber, Messenger, மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 11-08-2022 வியாழக்கிழமை அன்று நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்வில் கலந்து வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம் 2 Alle Racine 8em stage-Porte. A 93270 Sevran France எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
வீடு - குடும்பத்தினர்
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.