Clicky

பிறப்பு 24 APR 1970
இறப்பு 20 FEB 2021
அமரர் ராஜேந்திரன் இரத்தின வேலாயுதம் (ரமேஷ்)
வயது 50
அமரர் ராஜேந்திரன் இரத்தின வேலாயுதம் 1970 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vada90 Friends 01 MAR 2021 Australia

உன்னோடு நான் கழித்த ஒரேயொரு மணித்துளி! ************************* (மணி - 1 துளி - 3) இச்சுவுடன் நாம் கழித்த இனிய நாட்கள் எல்லாம்... இறுதி நாள் ஆகுமென்று இன்று நினைக்கவில்லை! இத்தனை இரங்கல்களுடன் இங்கு எத்தனை நண்பர்கள்! இனியுமிவனை நாங்கள் இவ்வுலகில் காண்போமோ?! இங்குளோர் அனைவரும்... இறுகிப்போன மனங்களுடன் இவனை எம்முடன் விட்டுவிடு இரந்தோமே இறைனிடம்! வெள்ளிக்கிழமை அன்று நான் விளக்கேற்றியும் கேட்டேனே! வெறித்துப் பார்த்துவிட்டு - ஏன் விலகிச்சென்றாய் நண்பா! விளக்கேற்றிய கை உனக்கு விளக்கேற்றும் மீண்டும் என்று விடியும்வரை எண்ணவில்லை! விதியை நொந்துகொண்டோம்! விடியலே இன்றிங்கு நீ - ஏன் வெறுமையாய் கிடக்கிறாய்? வெறித்துக்கிடக்குது வடா - நீ விழித்துக்கொண்டு வாடா! என்மனதில் நீயும் எப்படி இடம்பிடித்தாயடா - இதை என்னிடம் நானே பலமுறை கேட்டதுண்டு பதில் இல்லை! உன்னோடு நான் கழித்தது ஒரேயொரு மணித்துளிதான்! அத்தனை நண்பர்களில் - நீ அமைதியாய் இருந்தாயடா! அந்த அமைதிக்கு காரணம் இன்றுதான் விளங்கியது! ஏன்றும் இனி நீ அமைதியாய் தூங்கப் போகிறாய் என... ஏங்கித் தவிக்கிறோம் நாம் தாங்கமுடியாத வலிகளுடன் - நீ தூங்கு நண்பா தூங்கு - இனி தொந்தரவு செய்யமாட்டோம்! - அன்புடன் உடுவையூரான் ????????????????????