சென்று வா என் இனிய நண்பனே ???. ____________________________________________ பள்ளியில் தொடங்கிய பண்பான நட்பு , பருவங்கள் கடந்து பாரிஸ் வரை பழகிய நாட்கள் பாதியிலேயே பறிபோய்விட்டனவே .?. ____________________________________________ குடியிருந்த பாரிசிலே குதூகலிக்க நீயின்றி, ஆடிப்பாடி ஓடிய தெருக்கள் அனாதையாய் நீயின்றி, அரசியல்,சினிமா,நகைச்சுவை,தத்துவம்,பாடல்கள் என்று நீ இணைந்து சிறப்பித்த தளங்கள் யாவும் வெறிச்சோடி நீயின்றி, அன்பு அன்னை, மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்,நண்பர்கள், சுற்றத்தார் நாதியற்று நீயின்றி தவிக்கின்றோமே .?. ____________________________________________ கண்முன்னே வாழ்ந்தகாலம் கனவாகிப்போனாலும் என்முன்னே உன்முகம் எந்நாளும் உயிர்வாழும். மண்விட்டு மறைந்து நீ விண்ணோக்கி சென்றாலும் கண்விட்டு மறையாமல் என் காலம் வரை நீ இருப்பாய்.?. ____________________________________________ கள்ளமில்லா உன்முகத்தை கடைசியாக கட்டிலிலே கண்டவேளை ,கயவன் அந்த கடவுள் என்று கடவுளையே கடிந்து கொண்டேன்.?. ____________________________________________ “நண்பன் மரணம்” என்பதை இதுவரை வெறும் வார்த்தைகளாக வாசித்துக்கொண்டு சிறு துயரங்களுடன் கடந்திருக்கிறேன். ஆனால் தற்போது இன்றோ உன் பிரிவை வலியாக உணர்ந்து துடித்துக்கொண்டிருக்கிறேன்.?. ____________________________________________ நீயோ ஒருமுறை மரணித்தாய். ஆனால் நானோ உன் நினைவுகள் வரும் ஒவ்வொரு வேளைகளிலும் மரணிக்கின்றேனே.? ____________________________________________ சென்று வா என் இனிய நண்பனே. எங்கிருந்தாலும் உன் ஆத்மா சாந்தியடையட்டும். ?????????.