யாழ். சுவாமியார் வீதி இல. 11 கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகாவும், ஜேர்மனி Flensburg ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா London ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் நன்றி நவிலல்.
ஓர் திங்கள் ஆனதுவோ... கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய குழந்தை முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன,
அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் தெய்வம்
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
உங்கள் மூன்று செல்வங்களையும்
அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்தி
மூன்று இராஜாக்களிடம் ஒப்படைத்து
எம்மை விட்டு நீண்ட தூரம்
எங்கு சென்றீர்கள் அப்பா!
31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும், அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் பிரிவால்
வாடும்
குடும்பத்தினர்..!!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.