திதி: 08-11-2023
யாழ். சுவாமியார் வீதி இல. 11 கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகாவும், ஜேர்மனி Flensburg ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராறு மாதங்கள் இருட்டினிலே
எம்மை தவிக்க விட்டீர்கள்,
உருண்டோடியது ஓராண்டு.
உங்கள் அன்பு முகமோ
எங்கள் நெஞ்சைவிட்டு என்றும் நீங்காது.
அன்போடும் பண்போடும் வளர்ந்து
பாசத்துடன் எம்மை அரவணைத்த
குலக்கொழுந்தே எங்களை விட்டு
நீங்கள் பிரிந்ததேன்.
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவே.
இன்று பிரிவு என்னும்
துயரால் நாம் ஆதரவின்றி
தவக்கின்றோம்.
ஓராண்டு மறைந்தாலும் எம்
உள்ளங்களில் என்றும் நீங்கள்
நிலைத்து வாழ்வீர்கள்.
எங்கள் வாழ்வை வழி
நடத்திச் செல்வீர்கள்.
ஓராண்டு அல்ல எத்தனை
ஆண்டுகள் மறைந்தாலும் எங்கள்
நெஞ்சிசிருக்கும் வரை
உங்கள் நினைவிருக்கும்.
உங்கள் பிரிவால் ஏங்கித் தவிக்கும்
மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திப்போம்.