20ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராஜரட்ணம் தனபாலசூரியர் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனைவரிடத்திலும் அன்போடும்,
பண்போடும் பாசத்தோடும்,
கடமை, கண்ணியம்,
கட்டுப்பாட்டுடன் நல்வழிகாட்டி
எங்களை வளர்த்தெடுத்த
எமதருமை ஐயாவே..!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க
முடியாது- அதுபோல
உங்கள்
நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
ஆண்டுகள் இருபது
முடிந்தாலும்
எங்கள்
இதயங்களிலிருந்து
அகலாது
உங்கள் நினைவுகள்..!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் உங்களின் நினைவுகளோடு
வாழ்ந்திடுவோம் நாங்கள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்