யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hanover ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் ஸ்ரீபத்மநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட இராசரெத்தினம் ஸ்ரீபத்மநாதன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.