7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ராஜரட்ணம் செல்வராஜா
வயது 85
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கலட்டி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ராஜரட்ணம் செல்வராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறையடி சேர்ந்து
ஏழாண்டுகள் நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும்
எங்கள் குடும்ப விளக்கு!
எம்மோடு இருந்து
எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டி
பாசமிகு தந்தையாய்
பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும்
உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதப்பா...
ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும்
உங்களின் எண்ணங்களும் செயல்களும்
எங்களுடனே பயணிக்கும் அப்பா
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள்
பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்