10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAR 1935
இறப்பு 23 MAY 2012
அமரர் இராஜலட்சுமி இராஜரத்தினம்
ஓய்வுபெற்ற உபதபால் அதிபர் ஊரெழு
வயது 77
அமரர் இராஜலட்சுமி இராஜரத்தினம் 1935 - 2012 யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊரெழு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜலட்சுமி இராஜரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பத்து போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்