யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பெரியார் அவர்கள் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியார் சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற ரதீஷ் மற்றும் அனுஷா(ஜேர்மனி), பிரசன்னா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மதேவன்(ஜேர்மனி), டினுஷ்ஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், தம்பித்துரை செல்லத்துரை மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சேதுபதி, கமலாதேவி, மகேஸ்வரி மற்றும் சோதிமலர், முறுகையா, மகாதேவன் உமாதேவி, பரமேஸ்வரி, வெற்றிவேல் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தனுஷன், தர்மிந், ரிஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து நிலாவறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.