யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜராஜேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு வணக்கம்.
5ஆம் ஆண்டு நினைவு வணக்கம்
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா ஐந்து ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
அம்மா உங்களது அன்பான அரவணைப்பு,
இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள்,
நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்..
எம் இதயத்தில் குடியிருக்கும் எம் அம்மாம்மா...
நீ எம்மை விட்டு பிரிந்து
ஐந்தாண்டுகள் சென்றாலும்
என்றும் எம் நினைவில் திகழ்கின்றாய்.......
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..