


Raju, அமரர்களாகிய திரு திருமதி இராசமுத்தையா தம்பதிகளின் செல்லப்பிள்ளை. குடும்பத்தில் கடைசிப்பிள்ளையாக பிறந்து அவரது தாய், தந்தை,அண்ணாமார் ,அக்காமார், அயலவர்கள் உற்றார், உறவினர் எல்லோராலும் கொண்டாடப்பட்ட தெய்வீகப்புதல்வன். அதிலும் குறிப்பாக இந்திரனின் தோழனாக எப்போதும் இந்திரனையே பின்தொடர்ந்த சோதரன். நாம் இந்திரன் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் எம்மை முதலில் வரவேற்பவர் ராஜுவாகத்தான் இருக்கும். எங்கள் சைக்கிள் சத்தம் கேட்டதும் இந்திரனுக்கு தனது மொழியில் கூறிவிட்டு அவர் முதல் ஆளாக எம்மிடம் வந்து எமது சைக்கிள் handle ஐ பிடித்து அவருக்கே உரித்தான ஒரு புன்சிரிப்பு புரிவார். இந்திரன் Australia ற்கு சென்றபின்னர் நான் அவர்கள் வீட்டிற்கு சென்று தாய், தந்தையினரின் நலம் விசாரிக்கப்போவேன். அவ்வேளையில் அவரது முகத்தில் காணும்மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஞானவைரவரது வெள்ளிக்கிழமை பஜனையில் தன்க்கும் ஒரு தாளம் கேட்டு வாங்கி எங்கள் பஜனக்குழுவில் ஒருவராக இடம்பெறுவார். நல்லூர்தேரிற்கு கூட எம்முடன் நடைபவனிவந்த ஞானவைரவர் தொண்டன் . எமது இளவயது வாழ்வின் நினைவுகளில் ராஜுவிற்கென்று ஓர் இடம் எப்போதும் இருக்கும். கள்ளம் கபடமறியா கடவுளின் குழந்தை எமை விட்டகன்றது கவலை தரும் செய்தி. ராஜுவின் ஆன்மா எல்லாம்வல்ல எம்பெருமான் வைரவசுவாமி பாதம் பணிந்திட வேண்டுவதுடன் அவரது குடும்பத்தினர் , அவருடன் பழகிய நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Our heartfelt condolences to Thaya and the family at this difficult time