யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசாம்பிகை இராசலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு அமரர் இரசாம்பிகை இராசலிங்கம் அமரத்துவம் அடைந்த செய்தி அறிந்து நேரில் வருகை தந்து ஆறுதல் கூறியோர்க்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோர்க்கும், முகப்புத்தகம் (Face Book), புலனம் (WhatsApp), பற்றியம் (Messanger) மூலம் அனுதாபச் செய்திகள், கண்ணீர் அஞ்சலிகள் அனுப்பி அனுதாபம் தெரிவித்தோர்க்கும், மரண அறிவித்தல் ஊடாக அனுதாபம் தெரிவித்தோர்க்கும், உணவு, சிற்றுண்டி வழங்கியோர்க்கும், மூன்று நாட்களிலும் ZOOM (விரிவரங்கம்) மூலம் பங்கு பற்றி தேவாரதோத்திரங்கள் இசைத்தவர்கள், கண்ணீர் அஞ்சலி வழங்கியோர், பஜனை பாடியோர் அனைவருக்கும், மலர் மாலைகள், மலர் கொத்துக்கள், மலர் வளையங்கள் அனுப்பியோர்க்கும், இறுதிக் கிரியையிலும், அந்தியேட்டி கிரியையிலும் பங்கு கொண்ட அந்தணக் குருமாருக்கும், பண்ணிசை பாடியோருக்கும், இறுதிக்கிரியை மண்டப நிர்வாகத்தினருக்கும், தகனக்கிரியை மண்டபம் வரை வந்தவர்க்கும், முதியோர் இல்ல நிர்வாகத்தினருக்கும், நினைவு மலரை அழகாக வடிவமைத்தவர்க்கும், மலருக்கு இரங்கலுரை வழங்கியோர்க்கும், அன்னாரின் ஞாபகார்த்தமாக கிளிநொச்சி காப்பகத்தில் உள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு சிறப்புணவு வழங்கியோர்க்கும், எங்கள் இதய பூர்வமான நன்றிகளை கூறுகின்றோம்.
அன்புடன்,
கணவன், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூடடப்பிள்ளைகள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்