யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசாம்பிகை இராசலிங்கம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜலிங்கம்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தன், பூம்பாவை , சிவசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜகோகிலம்(ஐக்கிய அமெரிக்கா), இராஜாம்பிகை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சிற்றன்னையும்,
இராஜசேகரன்(கனடா), இரஞ்சிதலெட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்கந்தகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), DR. கமலநாதன்(அவுஸ்திரேலியா), கதிர்கமநாதன்(கனடா), பிரேமலதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரதீப்– DR. லாவண்யா, சங்கீதா - கல்யாண், கிரிஷாந்த்- பிரேடா, செழியன், துளசி- ஆதித்தன், பிரவீன், கீர்த்தனா, சேயோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மைரா, துருவ், சியோனா, நோலன், கைலேஷ் , ஷிவன்யா, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்